இரண்டாம் உலகப்போர் முடிவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு பல நெருக்கடி இருந்தது; அமெரிக்க ஏகாதிபத்தியம் கொடுத்த நெருக்கடி குறிப்பிடத்தக்கது.
1945 க்கு பின், ரஷ்யா, சீனா நாடுகளில் ஏற்பட்ட புரட்சியை போல இந்தியாவிலும் வருவதாக பல தேசிய தலைவர்கள் காந்தி, நேரு, ஜின்னா உணர்ந்தனர். பிரிட்டிஷாருடன் கைகோர்த்து அத்தகைய "இந்திய புரட்சி" ஏற்படாமல் எழுச்சிகள் நீர்த்து போக வழிசெய்தனர்.
காந்தியின் வாழ்க்கை சரித்திரம் மனனம் செய்த நம்மிடையே எத்தனை பேருக்கு 1946 இன் கப்பற்படை எழுச்சி (18 பிப்ரவரி, 1946 - 23 பிப்ரவரி 1946) பற்றி தெரியும்? பம்பாயில் நடந்த இரண்டு நாள் வீதிப்போர் எத்தனை பேருக்கு தெரியும்?, இந்திய விடுதலை வானின் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளில் இவையும் அடக்கம்.
"பொதம்கின்", "அரோரா" என்ற ரஷ்யாவின் கப்பல்கள் புரட்சி போரில் பங்கு கொண்டதால் பெயரை குழந்தைகள் பெருமையுடன் உச்சரிக்கின்றார்கள். அவை நிரந்தர நினைவு சின்னங்களாக விளங்குகின்றன.
ஆனால், இங்கே இந்தியாவில், 78 போர்க் கப்பல்களின் மாலுமிகள், 20 கப்பல் பயிற்சி நிறுவனங்கள், கரை ஸ்தாபனங்கள் என 20,000 பேர் பங்கு கொண்ட பம்பாய், சென்னை, கல்கத்தா, கராச்சி கப்பற்படை எழுச்சி நடந்த நினைவு சின்னம் கூட இல்லை.
அப்போது கிளர்ந்தெழுந்த மாலுமிகள் இந்திய தேசிய கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவை எதிர்ப்பார்த்து நின்றது. ஆனால் அவர்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இது எத்தனை பெரிய துரோகம்.
சரணடைந்தால் எந்த நடவடிக்கையும் இருக்காது " என்று காங் தலைவர்கள் கொடுத்த உறுதியின் பெயரால் சரணடந்தனர். ஆனால், 2000 மாலுமிகள் கைது செய்ய்ப்பட்டனர். இது காங்கிரஸ் தலைவர்கள் செய்த துரோகம் இல்லையா?
இந்திய முதலாளிகள், இந்திய சாதிய கட்டமைப்பு குலைந்துவிடாத வண்ணம், இந்திய உழைக்கும் மக்கள், அரசியலில், நிர்வாகத்தில் நுழைந்துவிடாத படி, இந்திய விடுதலை இருக்கவேண்டும் என்று காந்தி அரும்பாடுபட்டு உழைத்தார். இதன் காரணமாகவே, நேதாஜி, பகத்சிங் இவர்களில் வழிகளை காந்தி கொச்சைபடித்தினார்.
விமான ப்டை வேலைநிறுத்தம் செய்தது; ஆங்காங்கே கூர்க்கா சிப்பாய்கள், போலிஸ்காரர்கள் வேலைநிறுத்தம். 1946 ல் 10.000 போலீஸ்காரர்கள் வேலைநிறுத்தம். இவையெல்லாம் நம் பாடப்புத்தகங்களில் இருக்கின்றதா?
காங், லீக் தலைவர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் 20 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ஆயுத மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. தபால், தந்தி துறை வேலைநிறுத்தம் செய்தனர்.
மராட்டியத்தின் வார்லி விவசாயிகள், தெலுங்கானா விவசாயிகள், மேற்கு வங்க விவசாயிகள் கிளர்ந்தெழுந்தனர்.
நேதாஜியின் இந்திய தேசிய இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் (40 க்கு மேல்) தூக்கிலிட, காந்தியின் ஒப்புதல் ஆங்கிலேய அரசிடம் இருந்தது.
1945-ல் கல்கத்தாவில் கிளர்ந்தெழுந்த மாணவர்கள் மத்தியின் காந்தி, "நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் அதிகாரத்தை திடீரென கையில் எடுக்காதீர்கள்; தலைமையிடம் விட்டுவிடுங்கள்" (இதன் பொருள் : "நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை" என்று காந்தி மக்கள் உணர்வை கொச்சைப்படுத்தினார்)
"சண்டை சச்சரவுகளை தவுர்க்கவும், தீவிர போக்குடையோரை தடுக்கவும் முழுமூச்சாக பாடுபடுகின்றேன்" என்று நேரு இந்திய மக்கள் விடுதலை உணர்வை கொச்சைப்படுத்தினார்.
1946 ல் காந்தி புலம்பினார் : "பெரிய விஷய்ங்கள் காங்கிரஸின் கைவிட்டு நழுவி செல்வதுபோல் உள்ளது. அகமதாபாத் காரனும் சரி, முஸ்லீமும் சரி, ஹரிஜனும் சரி... யாரும் சொல் பேச்சு கேட்பதில்லை"
புரட்சிகர போராட்ட பேரலைகளை சாத்தியமில்லை என பிரிட்டிஷ் உணர்ந்தது. 1946 ல் நேரு தலைமையிலான காங்கிரஸின் "இடைக்கால அரசு" இந்திய மக்கள் கிளர்ச்சிகளை ஒடுக்க பொறுப்பெடுத்தது.
அதிகார மாற்றத்திற்கு பின்னும் இந்திய பொருளாதாரம் ஏகாதிபத்திய அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து விடுதலை பெறவில்லை;
புத்தகங்கள்
1. இந்திய சுதந்திர போரும் கப்பற்படை எழுச்சியும் - பரமேஸ்வரன்
2. ஆகஸ்டு 15, 1947 : அதிகார மாற்றம் : உண்மையா.... சடங்கா? - சுனிதிகுமார் கோஷ்.( பு.மா.இ..மு வெளியீடு)