March 26, 2012
மத்திய அரசும் மாநில அரசும் கைவிட்டாயிற்று. எதிர்கட்சிகள் உட்பட; மீதம் இருக்கும் இதர ஓட்டுக்கட்சிகள் இப்போடு ஆடிக்கொண்டிருக்கும் நாடகத்தை போராட்டம் நீர்த்துப்போகும் வரை ஆடும். சீமான், திருமா, வைகோ இவர்கள் போராட்டம், அன்னா ஹஸாரே-வின் போராட்டம் போல; நடுத்தர மக்களில் எதிர்ப்பலையை வைத்து சிறிது நாள் போராட்டம் என்னும் நாடகம் ஆடி மக்கள் உணர்வுகளை நீர்த்து போக செய்வதுதான் இவர்கள் வேலை. ஈழம் போராட்டங்களை, முத்துக்குமார் ஏற்படுத்திய உணர்வலையை இவர்கள் நீர்த்துப்போக செய்து ஆளும் வர்க்கத்திற்கு தோள் கொடுத்தவர்கள். கூடங்குளம் போராட்டத்திலும் இன்னும் சிறிது நாட்களில் இவர்கள் சாயமும் வெளுத்து விடும். மிஞ்சி இருப்பது "ஆரம்பத்தில் இருந்து கூடங்குளம் அணு-உலைக்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கும் கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மக்கள்தான்". அவர்கள்தான் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை முடிவெடுப்பவர்கள். அரசு கைவிட்டுவிட்டது; சட்டம் கைவிட்டுவிட்டது; காவல்துறை, இராணுவம் வாசல் வரை வந்தாயிற்று. இது போராடும் மக்கள் முடிவெடுக்க கட்டம். 1. வாழ்வாதாரம் போனால் என்ன? தலைமுறைகள் பாதிக்கப்பட்டால் என்ன்? என்று நாம் உயிர் பிழைப்போம். என்று அரசிடம் கிடைக்கும் சொற்ப நலத்திங்களை ஏற்றுக்கொள்வது 2. உயிர் போனாலும் பரவாயில்லை என்று களமிறங்கி "இது எங்கள் நிலம்; இதில் எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு" என்று அந்த பகுதியை மக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது.இந்திய அரசால் வாழ்வாதாரம் அழிக்கப்படும் ஒவ்வொரு பிரதேசத்திலும் நடப்பது இதுவே. போராடும் கூடங்குளம் மக்கள், தமிழின துரோகிகளை இனம்கண்டு ஒதுக்குவது முக்கியமானது. உண்ணாவிரதம் என்னும் அறவழி போராட்டம், அன்னா ஹஸாரே போன்ற ஊடக நண்பர்களுக்கும் போலி தேசபக்தர்களுக்கும் பயன்படும். உழைக்கும் மக்களுக்கு அல்ல; அரசும் முதலாளிகளும் முன் வைத்த காலை பின்வைக்கும் முடிவில் இல்லை; போராடும் மக்களும் உறுதியாக முன்வைத்த காலை பின்வைக்காமல், அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் சேதங்களை கணக்கிலெடுக்காமல் எதிர்க்க வேண்டும். சரித்திரம் தோறும் வெற்றி கண்டவை தோல்வியை கண்டு அஞ்சாத, தொடர் போராட்டங்களே! "போராட்டம்... தோல்வி; மீண்டும் போராட்டம், மீண்டும் தோல்வி; மீண்டும் போராட்டம், மீண்டும் தோல்வி கடைசியில் வெற்றி" -மாவோ