இடம்: ரோஹினி வீடு
நேரம் : மதியம்
(ரோஹினி வீட்டிற்குள் நுழைகின்றாள். அவளோடு
கமலாவும் கைகளில் கோப்புக்களோடு வருகின்றாள்.மீனாட்சி டேபிள் துடைத்து கொண்டிருக்கின்றாள்)
ரோஹினி : (அலைபேசியில்) மாமா,, அன்னைக்கு நான் சொன்னேனோ இல்லியோ, எஜிக்கேஷன் மினிஸ்டர் பெரியவாளோட தீவிர பக்தர்... எப்டி எங்கே பிடிச்சா சைன் கெடைக்கும்னு எனக்கு தெரியும்...
ஃபைல் ரெடியாயிடுத்து ...மாமா...
இனி அடுத்த ப்ரொசீஜர் பாப்போம்.. மாமா.
(கமலா கோப்புகளை சரி பார்த்து கொண்டிருக்கின்றாள். )
ரோஹினி : மாமா, ஒன் மினிட்...
(மீனாட்சியை பார்த்து)
மீனா, என்ன பண்ண போறா..
மீனாட்சி: அக்கா, நான் சாமி ரூம் தூசி தட்டப் போறேன்.
ரோஹினி: இரு. நான் பேசி முடிச்சுண்டு வரேன்.
மீனாட்சி : சரிக்கா.
ரோஹினி : ஆங்... மாமா ஈவ்னிங் பார்ட்டில பாக்கலாம். மாமிக்கிட்ட சொல்லிடுங்கோ.. நான்
க்ரீன் கலர் சாரில வரேன். அவர வேற கலர்ல சாரிக்கட்டிக்க சொல்லுங்கோ. இல்ல.. நீங்க மாமிய கூப்புடுங்கோ.. நானே சொல்ரேன்.
(காத்திருந்து...)

------------------------------ ---------
(மீனாட்சி கண்களில் கண்ணீரை துடைத்துக்கொண்டே நடக்கின்றாள். ஹாலிலிருந்து, ரோஹினி 'காபி கொண்டுவா' என்று கேட்க, 'சரிக்கா' என்று கண்ணீரை துடைத்தபடியே சொல்கின்றாள்; கமலா வீட்டிற்குள் வ்ந்துவிடுகின்றாள். கமலாவும் ரோஹினியும் ஃபைல் சம்பந்தமாக பேசிக்கொள்கின்றார்கள்; மீனாட்சி பாலை சூடு பண்ணுகின்றாள்.கமலா சமையலறை வருகின்றாள். )
கமலா: மேடம், என்னை அவங்களுக்காக காபி கொண்டு வர அனுப்பினாங்க. உள்ளே வரலாமா...
மீனாட்சி: (மலர்ந்த முகத்துடன்) வாங்க, வாங்கக்கா.. எவ்ளோ நாளாச்சி.. இந்த பக்கம் வந்து... வீட்டுக்காரர் கெளம்பிட்டாரா..
கமலா: இல்ல மீனாட்சி, அதான் மனசெல்லாம் வீட்டுலேயே இருக்கு; இந்த சனிக்கிழமை கெளம்பறாரு;
மீ: அக்காகிட்ட லீவ்கேட்டு, அவங்களும் சரின்னு சொல்லி ரொம்ப சந்தோஷமா இருந்தீங்க;
கமலா: (வாசல்பக்கம் பார்த்தபடி) எங்க, அதெல்லாம் நல்லாத்தான் லீவ் கொடுத்தாங்க,' முக்கியமான வேலைன்னா மட்டும் வா' ந்னு சொன்னாங்க. நானும் ஊரு, கோயிலுன்னு ப்ளானெல்லாம் போட்டு வச்சேன்.
மீ: ம்ம்ம்
கமலா: எம் புருஷன் வந்தன்னிக்கு மதியானமே வீட்டுக்கு கார் அனுப்பிட்டாங... முக்கியமான வேல வான்னு..
மீ: ம்ம்ம்
கம: அன்னிலருந்து, இந்த முக்கியமான வேலையத்தான் முக்கி முக்கி பண்ணிட்டு இருக்கேன். என்ன பொழப்பு இது...சே..
மீ:அட, அக்கா நீங்க வீட்டுப்பக்கம் வரலியா,, நானும் நீங்க லீவ்ல இருக்கறதா நெனச்சிட்டேன்.
கம: இல்லம்மா.. ஃபுல்லும் ஸ்கூல்லயே இருந்து வேல செய்ய வேண்டியதாயிடுச்சி.
(மீனாட்சி மூன்று டம்ளர்களில் காபி கலக்குகின்றாள்)
மீ: கஷ்டந்தான்...
கமலா: நாய் வேஷம் போட்டா கொலச்சிதான் ஆகனும்; சம்பளம் வாங்கினா.. சொல்ற வேலைய
செஞ்சிதான் ஆகனும்.. அவருக்கு மட்டும் நிரந்தரமா இங்கேயே வேல இருந்திருந்தா.. நான் ஏன் இந்த பொழப்புக்கு வரேன். போற இடம் எல்லாம் ஒவ்வொருத்தனுக்கும் பல்லிளிச்சி..
(சுவற்றை வெறித்து பார்த்திருக்கும் கமலா முகத்தில் கவலைகோடுகள்)
மீ: சரியா சொன்னீங்க, இந்த காலத்துல காசு இல்லைன்னா பொணத்த துக்க கூட ஆள் இல்ல... எங்க கிராமந்தான் அடிக்கடி கண்ணு முன்னாடி வருது..
(கமலா கையில் காபியை பெற்றுக்கொண்டு, ஹாலுக்கு செல்கின்றாள்)
----------------------------- -----
(மீனாட்சி சமையலறை அருகில் இருக்கும் பின்முற்றத்தில் குழாயில் தண்ணீர் பிடித்து தன் புடவையின் ஒரு பகுதியை கசக்கி கொண்டிருந்தாள். கமலா திரும்ப வருகின்றாள்.)
மீ : அக்கா, காபி ஆறிட போது, சூடா எடுத்து குடிங்க.
கமலா : (காபி குடித்தபடி ) நீ குடிக்கலையா...சூடா..
மீ : அக்கா, காபி ஆறிட போது, சூடா எடுத்து குடிங்க.
கமலா : (காபி குடித்தபடி ) நீ குடிக்கலையா...சூடா..
மீ: ஹா ஹா... நான் என்னிக்குக்கா காபி சூடா குடிச்சிருக்கேன். சின்ன வயசுல காபி தண்ணியெல்லாம், பெரியவங்க குடிக்கும்போது..கொஞ்சமா குடிச்சி பாத்திருக்கேன். அப்படியே பொட்டபுள்ளைங்க நமக்கு தந்தாலும் கடைசியா ஆறிப்போய் தண்ணியாத்தான் தருவாங்க. காபி, டீ எல்லாம் சூடா குடிக்கனும்னு இந்த வீட்டுக்கு வந்தப்பறம் தான் தெரியும். அப்படியே ச்சுடு இல்லாம குடிச்சி பழகிடிச்சி.
கம: என்னா... அப்போ.. ஸ்பெஷலா கோல்டு காபியா...
(இருவரும் சிரிக்கின்றார்கள்)
மீ: நீங்க வந்த ஒடனேயே கேக்கனும்னு நெனச்சேன். இந்த பொடவையெல்லாம் உங்களுக்குன்னே கடைல ஸ்பெஷலா விக்குதா. எவ்ளோ அழகா இருக்கு. நாங்கல்லாம் கட்டுனா இவ்ளோ பவுசு வரது இல்லையேக்கா...
ஒருவேளை நீங்க அழகா இருக்கறதுனாலா.. கண்ணுக்கு புடவையும் அழகா தெரியுதோ.
கம: (புன்னகைத்தபடி) நீ கிண்டல் பண்றியா... மீனாட்சி.
மீ: நெசம்ம்மா தான்க்கா.. நீங்க ரொம்ப அழகு. பின்ன இல்லாமலா. சாரு உங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்காரு.
கம: ஹா ஹா ஹா. அப்போ லவ்ன்னா அழகு தேவைன்னு சொல்ற...
மீ: (வெட்கப்பட்டு கொண்டே) பொம்பளகிட்ட ஆம்பிள மனச கொடுக்கறதே ஒடம்ப வாங்கத்தான்..
கமலா: அப்போ..ஆம்பளகிட்ட பொம்பள மனசு கொடுக்கறது...
மீ: அது எனக்கு தெரியாது; ஆனா.. ஆம்பளகிட்ட பொம்பள ஒடம்ப கொடுக்கறதே... மனச வாங்கத்தான்.
கமலா: நல்லா சொன்ன...
என்ன ஒரே தத்துவ மழையா பொழியுது. (நக்கலாக)இதெல்லாம் யாரு கண்ணு உனக்கு சொல்லி தர்றது.
என்ன ஒரே தத்துவ மழையா பொழியுது. (நக்கலாக)இதெல்லாம் யாரு கண்ணு உனக்கு சொல்லி தர்றது.
மீ: எல்லாம் வாழ்க்க பாடந்தான்... உங்க லவ் பத்தி ஒருநாள் சொல்லுங்கன்னு எவ்ளோ நாளா கேக்கறேன்...
கமலா: நீ சொல்ற் தத்துவமெல்லாம் சரியா தப்பான்னு என் வாழ்க்கைய வச்சு சொல்ல முடியாது மீனாட்சி. நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ் படிச்சோம். அது ப்ரெண்ட்ஷிப்பா லவ்வான்னு எல்லாம் யோசிச்சு பாக்கல. ஆனா, மாஸ்டர் டிகிரி படிக்க போறேன்னு சொன்னப்ப... வீட்டுல கால ஒடச்சுருவேன்னு.. அப்பா கத்தி ரகள பண்ணி... கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாத்தப்ப தான் மொத மொதல்ல தோணுச்சி... என்னால இவரத்தவிர வேற யார்கூடயும் வாழ முடியாதுன்னு.
வீட்டுல பொண்ணு பாக்கற படலம் ஒருபக்கம் நடந்துச்சு. நானும் இவரும் ஒரு கோயில்ல சந்திச்சு பேசினோம். அது வெறும் ப்ரெண்ட்ஷிப் இல்லன்னு பேசும்போதும் பாக்கும்போதும் புரிஞ்சிது.
வீட்டுல பொண்ணு பாக்கற படலம் ஒருபக்கம் நடந்துச்சு. நானும் இவரும் ஒரு கோயில்ல சந்திச்சு பேசினோம். அது வெறும் ப்ரெண்ட்ஷிப் இல்லன்னு பேசும்போதும் பாக்கும்போதும் புரிஞ்சிது.
மீ: ம்ம்ம்
கமலா: அப்போ இவருக்கு நல்ல வேல இல்ல. வேற சாதி. ஆனாலும்.. ஆளு லேசுபட்ட ஆளு இல்ல. அடுத்த நாளே வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட 'நானும் உங்க பொண்ணும் சேந்து வாழனும்னு நெனக்கிறோம்; நீங்க கமலாவ மேல படிக்க வைங்க; அது அவளோட கனவு; இப்போ தான் அப்பா தவறி இருக்கார்; நான் ஒடனே கல்யாள பேச்சு பேசினா.. எங்கபக்கம் நல்லாருக்காது; நானும் ஒரு நல்ல வேல தேடி கௌரவமா நாங்க வாழ முடியும்..."
மீ: யம்மாடியோ... ரொம்ப தெயிரிய்னதான்..
கமலா:(சிரித்தபடி) ஆமா...
மீ: அப்பா என்ன சொன்னார்.
கமலா: அப்பா... வாய் நெறய வெத்தல போட்டிருந்தார். மொத்தத்தையும் அவர் மூஞில துப்பிட்டார்...சாதி பேர் சொல்லி 'வெளியே போ' நு கத்தினார். நான் என் என்னோட துணிங்கள கொஞ்சம் அள்ளிட்டு...வெளிய வந்து நின்னேன். அம்மாவையும் தங்கையையும் பாத்தேன். கண்ணாலேயே 'போ'னு சொன்னாங்க. கெளம்பிட்டோம்.
மீ: ம்ம்ம்
கமலா: அப்போ அதுக்கு முன்னாடி ப்ரெண்ட்ஸா இருந்தோம்ங்கறது மறந்திருந்துது... இப்போ இவ்ளோ வேகமா காதலிச்சிருக்கோம்னு மறந்திருக்கு.. மீனாட்சி. அது லவ்வான்னு எல்லாம் சொல்ல தெரியல.
இப்போ.. வாழ்க்கை எங்க பின்னாடி தொரத்த, நாங்க வாழ்க்கைய தொரத்தன்னு... வாழ்க்கை படு போராட்டமா இருக்கு;
இப்போ.. வாழ்க்கை எங்க பின்னாடி தொரத்த, நாங்க வாழ்க்கைய தொரத்தன்னு... வாழ்க்கை படு போராட்டமா இருக்கு;
மீ: ம்ம்ம்
கமலா: அவரு மஸ்கட்ல போய் ஒழைக்கறதும் நான் இங்க ஒழைக்கறதும்.. எங்க பிரிவும்.. ரெண்டு பிள்ளைங்களும்..வாடக... பிஸ்.. மாத்திரை, மருந்து, மளிகைன்னு... இப்படியே போனாலும்.. எல்லாத்துக்கும் நடுவுல... நானும் அவரும் போன்ல பேசிக்கிறப்போ...'ரொம்ப கஷ்டமா இருக்கா'ன்னு நான் அவர கேக்கறதோ, அவரு என்னை கேக்கறதோ... இருக்குன்னா.. இது தான் மீனாட்சி லவ்.
மீ: (கனிவான முகத்தோற்றத்தோடு.. கன்னத்தில் கைவைத்தபடி) ம்ம்ம்ம்
கமலா: என்ன பாக்கற.. புதுசா பாக்கற மாதிரி...
மீ: (பெருமூச்சு விட்டபடி... ) ம்ம்ம் புதுசா பாக்கற மாதிரி தான் இருக்கு; (சற்றே உயர்ந்த குரலில்) பொறாமையா இருக்குக்கா...
கமலா: (சிரித்தபடி) எதுக்கு...
(கமலாவின் புன்சிரிப்பு, மீனாட்சியின் சோகமான முகம் பார்த்து... மாறி மறைகின்றது)
கமலா: (பேச்சை மாற்றும் விதமாக) என்ன மீனாட்சி,பொடவையில இவ்ளொ தண்ணி சொட்டுது..
மீ: இல்ல, கரையா இருந்துது... அதான் கொஞ்சம் சோப்பு போட்டு அலசினேன்.
கமலா: நீ இந்த பேட் எல்லாம் யூஸ் பண்ண மாட்டியா?
மீ: அட... நீங்களுமா. அத்தோட... அது விக்கற விலைக்கு நாங்க ஒருநாள் சோரு தின்னுவோம். இது எம்புள்ள ரத்தக்கா... தலையில அடிபட்டுடுச்சு...
கமலா: அய்யோ.. என்னாச்சு.. இப்போ எப்படி இருக்கான்.
மீ: தெரிலக்கா.. காலையில நான் கெளம்பற நேரம்.அவன தூக்கிட்டு ஆஸ்பத்திரி எல்லாம் தனியா போக நேரமில்லை; அப்படியே.. அம்மா விட்டுக்கு போய் தங்கச்சியயும் கூட்டிட்டு.. சுகாதார மையத்துக்கு போனேன். ஒரு நர்சு கூட இல்ல.. அவ்ளோ காத்தால யாருக்கா இருப்பா...
கமலா: ம்ம்ம்
மீ: அவங்களுக்கு ஒரு பாக்கேட்டு ரொட்டி மட்டும் வாங்கி கொடுத்துட்டு நான் இங்கே வந்துட்டேன்.
கமலா: அடிப்பாவி.. அவன் இப்போ எப்டி இருக்கான்?
மீ: அதான்கா உங்ககிட்ட இல்லைன்னா அக்காகிட்ட கேட்டு ஒரு போன் மட்டும் பேசிடலாமுன்னு யோசனையா இருந்தேன்.
கமலா: இந்தா மொதல்ல பேசு. மேடம் அப்போவே மாடிக்கு போய்ட்டாங்க; தூங்கியிருப்பாங்கன்னு நெனக்கிறேன். இல்லன்னா நாம பேசிட்டு இருக்கறது வம்பாயிடும். பாத்துட்டு வரேன்.
மீ: (மொபைலை வாங்கியபடியே) சரிக்கா

.
---------------------------- ------------
----------------------------
No comments:
Post a Comment