March 28, 2012
##நக்சலைட்டுகள் : பிறப்பதில்லை; இந்திய அரசால் உருவாக்கப்படுகின்றார்கள் ## மேற்கு வங்கத்தின் ஒரு மூலையில் இருந்த "நக்சல்பாரி" எனும் கிராமம், இப்போது இந்தியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றது; மத்திய இந்தியாவின் நக்சலைட் ஒருவர் அறிமுகம் வேண்டுமா? அவர் சிறு கோவணத்தோடு, தோளிலும் தலையிலும் துண்டோடு, வெத்தலை போட்ட வாயோடு, கையில் மூங்கில் கம்போடு, செருப்பில்லாத காலோடு இயற்கையோடு வாழும் பழங்குடி மக்களில் ஒருவர். "ஆம்". அவர் இந்திய அரசின் "பச்சை வேட்டை"யால் அழித்தொழிக்க தேடப்படும் "மாவோயிஸ்ட்"... உலக பெருமுதலாளிகளுக்கு தனிமங்களுக்காக சுரங்கம் தோண்ட, இந்திய அரசால் தாரை வார்க்கப்பட்ட "தண்டகாரன்யா மலை எங்கள் மலைத்தாய், அன்னியருக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று மலையை , நதியை, இயற்கையை காத்து நிற்கும் காவலன் அவர். அவ்வாறு தன் சொந்த மலையை காட்டை காத்து நிற்காத பழங்குடி இனத்தவர் சிலர், காட்டை விட்டு ஓடி வந்து, சிறு நகரங்களின் பாதையோரத்தில் பிச்சைக்கார வாழ்க்கையை நடத்துகின்றனர்; சிலர் சொந்த மண்ணில் "அகதிகளூடைது" போன்ற முகாம்-களில் இருக்கின்றார்கள்; சிலர் சொந்த இனத்தவரை கொல்லும் "சல்வா ஜுடும்" வெறியர்கள் ஆகின்றனர்.
இந்திய அரசின் மீது அதிருப்தி கொண்ட ஒவ்வொருவரும் நக்சலைட் தான். விலைவாசி உயர்வு, வேலையின்மை, வேலையில் நிரந்தரமினமை, குறைந்த சம்பளம், கடும் உழைப்பு,அடிமை உழைப்பு, பள்ளி கட்டண உயர்வு, மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் இருப்பது, போக்குவரத்து வசதியின்மை; என்று எல்லாவற்றாலும் சலிப்படைந்து வாழும் ஒவ்வொருவரும் நக்சலைட். "இதிலெல்லாம் நாங்க தப்பிச்சிட்டோம்ப்பா" என்று திருப்தி அடைவோர் கவனத்திற்கு, சீர்கெட்ட இந்த சமூக சாக்கடை உங்கள் மீதும் உங்கள் பிள்ளைகள் மீதும் தெறித்துக்கொண்டே இருக்கும்வரை, "டாக்டர் ஆவான், இன்ஞ்சினியர் ஆவான்னு கனவு காணும் உங்க வசதிபடைச்ச பிள்ளையும் உள்ளுக்குள் ஒரு ஏகாதிபத்திய அடிமை அல்லது நக்சலைட்" "பால் விலை ஏறிடிச்சி;" "ரோடு சரியில்ல;" "விவசாயம் அழிஞ்சி போச்சு;" "என்ன பொழப்பு இது; "பஸ்ல ஏற முடியல், இடிச்சி தல்றானுவ;""ரேஷன் அரிசி புழுத்து நாறுது;" "கலெக்டர் ஆபீஸ்ல, பஞ்சாயத்து ஆபீஸ்ல லஞ்சம் குடுத்தும் வேல நடக்கல", "இந்த காசுக்கு அழுகிப்போன காய்தான் கெடைக்கும்", "மாசத்துல 20 நாள் வெறும் புளி தண்ணி தான் குழம்பு" இப்படியெல்லாம் புலம்பாதீங்க... இதையெல்லாம் கேட்டு கேட்டு வளரும் பிள்ளை, "நக்சலைட்" போராட்ட பாணி வேறுபட்டு இருப்பினும்... இந்திய அரசை பொறுத்தவரை, "அரசாங்கத்தை கேள்விகேட்கும், நியாயத்தை வலியுறுத்தும் ஒவ்வொருவரும் நக்சலைட்" ஆகையால், "கூடங்குளம் மக்களும் நக்சலைட் தொடர்புடையவர்கள்;" என்று மத்திய அரசு முத்திரை குத்துகின்றது; அதாவது, "நீ ஏகாதிபத்திய அடிமையாய் இரு; அல்லது நக்சலைட் ஆகிவிடு" என்பதே. இதையெல்லாம் கடந்து கூடங்குளம் "உண்ணாவிரத போராட்டம்" வெற்றி பெற்று அணு-உலையை மூடும் நிலை வந்தால், ஜனநாயகம் வாழ்கின்றது என்று அர்த்தம்... நாமும் இந்திய ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம் என்று பெருமை படலாம். ஆனால்... நீங்கள் சொல்லுங்கள் இந்த அறவழி உண்ணாவிரத போராட்டம் இந்திய அரசின் செயல்பாட்டை அசைக்குமா?

No comments:
Post a Comment