Friday, 28 September 2012

லீனா மணிமேகலையை வினவுகின்றேன்!

நான் பெண்ணியவாதி அல்ல; மேடைகளில் பேசுபவளல்ல; சிற்றிதழ்களுக்கு கதை, கவிதை, கட்டுரை எழுதுபவள் அல்ல; வெறும் வாசகர் வட்டத்தில் இருப்பவள்; சிறுவயது முதல் பெண்கள் மீதான் அடக்குமுறயை வெறுமனே வெறுத்தவள்; பெண்ணியம் பேசும் எந்த பெண்ணையும், துடிப்பான எந்த பெண் பிரபலத்தையும் பெருமையாக பார்த்தவள்;
ஆனால், பெண்ணியம் என்பது வெறும் ஆணாதிக்கத்தை ஒழிக்க பயன்படாமல், ஆண்களை வெறுத்தொதுக்கும் விதமாக இருப்பது பல பெண்ணியவாதிகளின் முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது; (சொற்பமான எண்ணிக்கையில் சில பெண்ணியவாதிகள் இருக்கின்றார்கள்; வரவேற்கத்தக்கது;)
இதனால் பெண்ணியம் பற்றிய எனது நிலைப்பாடு இப்போது வேறுபடுகின்றது. "ஆணாதிக்கத்தை புரிந்து கொள்ள பெண்ணை பேச விடு" இது சரிதான்; ஆனால் அவை பக்குவப்படாத எழுத்துக்கள், வெறும் புலம்பல், கோபம், வெறுப்பு என்று இருந்தால், சமூக முன்னேற்றத்திற்கு பயன்படும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லாததாக இருந்தால் அதை எப்படி "மனித நேயம் வளர்க்கும் பெண்ணியம்" என்று பெயர் வைப்பது?
‎"நான் ஆணுக்கு உயர்ந்தவளல்ல; தாழ்ந்தவளல்ல; சமமானவளுமல்ல; முற்றிலும் வேறானவள்"
#வினவுக்கு எதிரான கட்டுரையான "என் கவிதைக்கு எதிர்த்தல் என்று பெயர் வை" லீனா எழுதிய வாசகங்கள்"..(அந்த கட்டுரை இப்போது நீக்கப்பட்டுள்ளது;)

#"வேறானவள் என்றால்" எந்த உரிமையில் பெண்ணுக்காக உழைப்பவள்; பெண்ணியவாதி என்ற பட்டங்கள் எதற்கு/ என்று அவரை தெரிந்தவ்ர்கள் கூறலாம்; அல்ல்து அவரே, அடியேன் பக்கம் வந்து விளக்கினாலும் சரி;
லீனா சொல்லும் கம்யூனிஸத்தில் ஆண்கள் இல்லையா? அவர் கவிதைகளில் ஆணாதிக்கவாதிகளாக பார்க்கப்ப்ட்ட கார்ல் மார்க்ஸ், லெனின் தத்துவங்கள் லீனாவின் கம்யூனிஸத்தில் இருக்கின்றதா? இல்லையா?
ஒரு பெண்ணின் ஆதிக்கதிமிருக்கு எதிராக எழுத வினவிற்கு கருத்து சுதந்திரம் இல்லையா?
லீனா, நீங்கள் ஒரு கூட்டம் நடத்தி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபரின் கருத்தை கருத்தை வெல்லும் நிதானம் இன்றி பதட்டத்துடன், கேள்வி கேட்பவர்களை அறைவதற்கு கை ஓங்குவீர்களா? அதுதான் உங்கள் பெண்ணியமா? உங்கள் கண்ணியமா?
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.keetru.com%2Findex.php%3Foption%3Dcom_content%26view%3Darticle%26id%3D5509%253A2010-04-12-02-50-45%26catid%3D902%253A2009-08-16-17-58-44%26Itemid%3D268&h=NAQHWpYp4AQHVc_KjiIZIxGUq5gXvQGzeXbod8DHrQvkDmg&enc=AZP8_VoH_dYuqdO_2Ev9R2Hmgs3GiEnBn_4ZK9KvFF3gGvZEUp-dcINm6KIPBlhRXYLvWNF4JqatLIjv4vcvR8k6yUS5kQhiByKhdHN-5BGU7fgayoHB8cFuBm2dKILgssw
ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனமற்ற கருத்துகள், சொல்லாடல்கள் எவ்வளவிற்கு இருக்கின்றது நிதர்சனத்தில். வினவு ஆணாதிக்கத்தோடு உங்களை பற்றிய பதிவிட்டிருப்பதாக கூறுகின்றீர்கள். இருக்கட்டும்; அதில் ஆணாதிக்கம் மட்டும்தான் இருக்கின்றது என்று உங்களால் கூற முடியுமா? அதிலிருக்கும் ஆணாதிக்கத்தை வடிகட்டிவிட்டு, அதில் எழுப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கவெண்டுமல்லவா? விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, சுயவிமர்சனம் செய்ய தயங்குவது பக்குவப்பட்ட பிரபலத்தின் அடையாளம் அல்ல; உங்கள் மீதான் விமர்சனஙளுக்கு நிங்கள் பக்குவமாக, நிதானமாக விளக்கம் கொடுத்தாக வேண்டும்; அதைவிட்டுவிட்டு உங்கள் முகநூல் பக்கத்தில் உங்கள் புலம்பலை மட்டுமே பதிவுசெய்திருக்கின்றீர்கள். இதுதான் பெண்ணியமா?
எதையும் நியாயப்படுத்தி விடமுடியும் என்று நினைக்கும் உங்கள் வறட்டுவாதம் ஒரு நாள் தோற்றுபோய்விடாதா? உண்மையான மனிதநேயமும், பொதுவுடையும் எப்போது சிந்திக்க போகின்றீர்கள்? நேர்மையான வாழ்வோடு, சிந்தனையோடு நேச்க்கரம் நீட்டும் ஆண்கள் உங்கள் வட்டத்தில் இல்லையா? அல்லது அவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுகின்றார்கள் என்பதற்காக, அவர்களை அவர்களுடைய ஆணாதிக்கத்தோடு ஏற்றுக்கொண்டீர்களா?
என்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து feminist என்ற வார்த்தையை நீக்குவதற்கு காரணம் பல பெண்ணியவாதிகளின் கருத்துக்களோடு, உங்களுடையதும் உண்டு...
#கூடிய விரைவில் எதிர்பார்க்கலாமா?
"தோழர் லீனா மீதான அடக்குமுறைக்கு எதிரான கூட்டம்"
பங்குகொள்பவர்கள்:
ஆணாதிக்கம் இல்லாத ஆண்கள், பெண்கள் மட்டும்;#
நீங்கள் அணிந்திருக்கும் கம்யூனிஸ்ட், பெண்ணியவாதி ஆகிய முகமூடிகளை கழட்டி எறியுங்கள்; உங்கள் வாழ்வாதாரத்திற்காக உழையுங்கள்; என்றாவது ஒரு நாள் சாயம் வெளுத்துத்தானே ஆகும்.
லீனா, 2009 ஆண்டு வினவால் நீங்கள் பெற்ற மன உளைச்சல் போல, இப்பொதும் இருந்தால் அது தீர்ந்து, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது என்னுடைய இந்த பக்கத்திற்கு வந்து பதில் தாருங்கள்; பதில் தருவதும் தராததும் உங்கள் விருப்பம்;

No comments:

Post a Comment